ஒருபடி முன்னேற்றம்… மீண்டு வரும் ரிஷப் பண்ட் : கார் விபத்துக்கு பிறகு முதல்முறையாக வெளியான போட்டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 12:52 pm

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார். ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை ‘ஒரு படி முன்னேற்றம்’ என்ற வாசகத்துடன் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

கம்பூன்றி நடப்பது போல் உள்ள அந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

  • actress sona shared about issue between vadivelu and her வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்