இனிமே அஜித் கூட நடிக்க மாட்டேன்…. எல்லாம் அவர சொல்லணும் : பிரபல நடிகை திடீர் முடிவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 5:32 pm

சினிமாவை பொறுத்தவரை போட்டி பொறாமை என்பது ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகள் பிரச்சனையான பின்பு உடன் நடிப்பதை தவிர்த்து வருவதும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். உச்சத்தில் உள்ள ஒரு நடிகர் என்றால் அது அஜித்தான்.

தான் உண்டு, தன் வேலையுண்டு என படத்தில் நடிப்பதை மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார். அவருடன் நடிக்க நடிகர், நடிகைகள் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அஜித்துடன் 4 முறை ஜோடி போட்டு நடித்த நடிகைதான் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற நயன், விமர்சனங்களை தாண்டி சினிமாவில் கலக்கி வருகிறார்.

அவருடைய கணவர் விக்னேஷ் சிவன், போடா போடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.நானும் ரவுடி தான் படம் மூலம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் ஹிட் படமாக அமைந்தது

இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்குகிறார் என அறிவிக்கப்பட்ருந்த நிலையில், விக்கி சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

படத்தை துவங்கும் முன், லைக்கா அந்த படத்தில் இருந்து விலகியது. இதையடுத்து அஜித்தும், விக்கி இயக்கத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

இதனால் மிக மன வருத்ததில் உள்ளாராம் விக்னேஷ் சிவன். கணவனின் இந்த நிலையை எதிர்பார்க்காத நயன்தாரா, இனி அஜித்துடன் நடிக்க மாட்டேன் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவனின் ஒரு வரியைக் கதையை கேட்டதும் அஜித் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முழு கதையும் கேட்டதும் அதில் அவருக்கு திருப்தி இல்லை. இதனால் அதில் இருந்து விலகி உள்ளார் என கூறப்படுகிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!