என்.ஆர்.காங்கிரசை கட்டாய திருமணம் செய்துள்ளது பாஜக : விரைவில் விவாகரத்து.. நாராயணசாமி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 9:25 pm

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

அப்போது அவர், அதானி குழுமத்தின் பொருளாதார ஊழல்களுக்கு பிரதமர் மோடி உடந்தையாக இருந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மோடி மவுனம் காப்பது ஏன்? இதை விசாரிக்க மத்திய அரசு நிறுவனங்களும் தயாராக இல்லை, மோடியும் தயாராக இல்லை.

வருமான வரித்துறையும் விசாரிக்க மறுத்துள்ளது. பிரதமருக்கும், அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும், பங்கு இருப்பதும் உறுதியாகியுள்ளது. இதை நீதிமன்றம் விசாரித்து தான் உரிய நீதியை தர வேண்டும்.

புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி வழங்கியது என்று முதலமைச்சர் ரங்கசாமியும், பா.ஜ.கவும் தம்பட்டம் அடித்து வருகின்றனர். உண்மையில் மத்திய அரசு நிதி வழங்கியதா என ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? நான் எம்.பி.யாக இருந்தபோது புதுச்சேரிக்கு 13 புதிய ரயில்கள், காரைக்காலுக்கு 6 புதிய ரயில்கள், கேந்திரிய வித்யாலயா, என்.ஐ.டி உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்டு வந்தேன்.

ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு ஒரு ரயிலை கூட புதிதாக கொண்டு வரவில்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸை பா.ஜ.க கட்டாயத் திருமணம் செய்துள்ளது. இது விரைவில் விவாகரத்து ஆகும்” என்றார்.

  • Samantha Atharvaa first film என்னுடைய முதல் காதலி சமந்தா…வெளிப்படையாக சொன்ன இளம் நடிகர்..!
  • Views: - 347

    0

    0