“Lady Superstar’னு கூப்பிட்றது சுத்தமா பிடிக்கல..!” – மாளவிகா மோகனன் அதிரடி.. வறுத்தெடுக்கும் நயன்தாரா ரசிகர்கள்..!
Author: Rajesh12 February 2023, 3:00 pm
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கனெக்ட். இவர் தற்போது, அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜோடியாக ஜவான், மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு திரைப்படம், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இப்படி பிரபலமாக வலம் வரும் நயன்தாரா அவர்களை, மாளவிகா மோஹனன் பேட்டிகளில் மறைமுகமாக பேசி வருகிறார். பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற தமிழ் படங்களில் நடித்த இவருக்கு தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனிடம், ”தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்ட போது பதிலளித்த மாளவிகா மோகனன், “நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன். ஒரு மருத்துவமனை காட்சியில், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்” என்று கூறி இருந்தார்.
இதற்கு ஒரு பேட்டியில் பதில் அளித்த நயன்தாரா, ‘ஹாஸ்பிடல் சீன் என்பதால் அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்’ என்று கூறினார்.
இந்நிலையில், மீண்டும் பேட்டி ஒன்றில் மாளவிகா, லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி ஹீரோயின்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்துள்ள அவர், ஹீரோக்களை எப்படி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கிறோமோ, அதேபோல் ஹீரோயின்களையும் சூப்பர்ஸ்டார் என்றே அழைக்க வேண்டும். கத்ரீனா கைஃப், ஆலியா பட், தீபிகா படுகோன் போன்றவர்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதில்லை. அவர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் தான் என்று பேசி உள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மீதுள்ள பொறாமையில் தான் மாளவிகா இப்படி பேசி உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். இதுவரை சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவது நயன்தாரா மற்றும் மஞ்சு வாரியர் தான். ஆனால் அவர்களது பெயரை குறிப்பிடாமல் பாலிவுட் நடிகைகளின் பெயரைச் சொல்லி மாளவிகா மோகனன் பேசியது குறிப்பிடத்தக்கது.
Dont Call As Lady Super #MalavikaMohanan pic.twitter.com/OS3wTml8j4
— chettyrajubhai (@chettyrajubhai) February 11, 2023