தேசிய கீதத்தை தவறாக பாடுவதா? வெட்கக்கேடு : திரிணாமுல் காங்., கட்சிக்கு பாஜக கண்டனம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 3:12 pm

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கூச்பெஹாரில் மாதாபங்கா பகுதியில் அக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, அகில இந்திய பொது செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனை படித்த ஒருவர் தவறாக ஒரு வரியை விட்டு விட்டார் என்றும் அதற்கு அடுத்த வரியை 2 முறை திருப்பி படித்து உள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

ஒரு பொது கூட்டத்தில் தேசிய கீதம் தவறாக பாடப்பட்டு உள்ளது என பா.ஜ.க. கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் சுகந்த் மஜும்தார் வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.

இது என்ன அபிஷேக் அவர்களே? தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து, அதனை சரியாக பாட கூட உங்களால் முடியவில்லை. தவறாக பாடியது அவமரியாதையை வெளிப்படுத்தி உள்ளது. வெட்கக்கேடு என தெரிவித்து உள்ளார்.

  • My career gone after acted in Ajiths Veeram Movie வீரம் படத்துல நடிச்சு என்னோட கெரியரே போச்சு.. புலம்பும் நடிகை!