சண்டை காட்சியில் கைக்கு கூட டூப்பா..? வீடியோ பதிவிட்டு நடிகர் விஜய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
12 February 2023, 5:30 pm

தோழா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் வம்சி பைடிபல்லி அவர்களின் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் வாரிசு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது. இப்படம் உலகமுழுவதும் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல ட்ரோல்களை சந்தித்தது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சியில் விஜய் கைக்கு டூப் போட்டுள்ளதாக நெட்டிசன் ஒருவர் கிண்டல் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!