வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை… கதவை திறந்து பார்த்த உறவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 10:53 am

மதுரை : உசிலம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி என்பவரது மனைவி செல்லம்மாள். கணவர் சாமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மகன், மகளும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி வத்தலக்குண்டு நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி செல்லம்மாள், இரவு வழக்கம் போல் உறங்க சென்றார். இன்று காலை முதலே வீட்டை விட்டு வெளியே வராததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு, காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் தடயவியல் மற்றும் குற்றப்பிரிவு போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!