அவங்க “பப்ளிக் ப்ராபர்ட்டி”.. பயில்வானுக்கு ஷகிலா கொடுத்த ஷாக் டிரீட்மெண்ட்..!
Author: Vignesh14 February 2023, 12:30 pm
சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
சமீபகாலமாக youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியத்தை பலர் கண்டித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதனிடையே, நடிகை ராதிகா பொதுவெளியில் செருப்பால் அடித்தும், ரேகா நாயர் கேவலமாக சண்டை போட்டும் இருந்தார். இந்நிலையில், பயில்வானை நடிகை ஷகிலா பேட்டி எடுத்து வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில், நடிகைகள் பப்லிக் ப்ராபர்ட்டி என்று கூறியதற்கு பொறுமையை இழந்த ஷகிலா, பல பத்திரிக்கைகளில் சொல்வது, சிலரிடம் கேட்டதை வைத்து தான் நீங்கள் பேசி வருகிறீர்கள். அதற்கான ஆதாரம் உங்களிடம் இல்லை என்று பயில்வானை நடிகை ஷகிலா வெளுத்து வாங்கி உள்ளார்.
மேலும், நடிகை கஸ்தூரி ஆண் ஒரு என்று விமர்சனம் செய்ததையும் குறி செருப்பால அடித்தது போல் பயில்வானை நடிகை ஷகிலா கேட்டுள்ளார். இதனால் சற்று குழப்பத்துடன் என்ன சொல்வது என்று முழித்த பயில்வான் நான் தெரியாமல் கூறிவிட்டேன். அதை எடிட் செய்யாமல் போட்டு விட்டார்கள் என்று சமாளித்து வருகிறார்.