‘இனி நான் சிங்கிள் இல்ல’.. காதலர் தினத்தன்று காதலியை அறிமுகப்படுத்திய பிரபல வாரிசு நடிகர்..!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 4:33 pm

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களின் காதலை தனது காதலிகளிடம் வெளிப்படுத்தும் விதமாக, பூக்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி உற்சாகமாக இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜெயராம். முறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, பஞ்ச தந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அண்மையில் பிரமாண்ட தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி வேடத்திலும் நடித்து போற்றப்பட்டார். அதேபோல, ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றார். தந்தையைப் போல தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாவக் கதைகள், புத்தம் புது காலை ஆகிய ஆந்தாலஜியிலும், பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் காளிதாஸ் ஜெயராம் பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் ஹிட்டான விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார்.

இந்த நிலையில், காதலர் தினத்தையொட்டி, தனது வருங்கால மனைவியும், தற்போதைய காதலியையும் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் காளிதாஸ் ஜெயராம். சென்னையைச் சேர்ந்த பிரபல மாடல் தாரிணி காளிங்கராயருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், “இறுதியாக காதலர் தினத்தில் இனிமேல் நான் சிங்கிள் இல்லை”. என பதிவிட்டுள்ளார்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…