வயிற்றில் உள்ள புண்களை ஒரே வாரத்தில் ஆற்றும் அதிமதுரம்!!!

Author: Hemalatha Ramkumar
14 February 2023, 7:17 pm

ஒரு நோய் ஆரம்ப காலத்தில் இருக்கும் போது அதனை கை வைத்தியம் மூலம் சரி செய்து விடலாம். அதே போல தான் வயிற்றில் உள்ள புண்களும். சரியான உணவுகளை எடுத்து வந்தாலே வயிற்று புண்களை சுலபமாக ஆற்றி விடலாம். வயிற்றில் கடுமையான வலி, எரிச்சல், காரமான உணவு சாப்பிடும் போது அசௌகரியம் ஏற்படுவது ஆகியவை வயிற்று புண் இருப்பதன் அறிகுறிகள் ஆகும். இந்த வயிற்று புண்களை ஆற்றும் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மருந்து செய்வதற்கு தேவையான பொருட்கள்:
ஓமம்- 100 கிராம்
சுக்கு- 200 கிராம்
அதிமதுரம்- 400 கிராம்

இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளலாம். மருந்து செய்ய முதலில் சுக்கை சுத்தம் செய்து பொடியாக இடித்து கொள்ளுங்கள். அதே போல அதிமதுரத்தையும் சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். இப்போது மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

நாம் தயார் செய்த பொடியில் இருந்து ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து கொள்ளுங்கள். இதனை ஒவ்வொரு உணவிற்கு முன்பும் மூன்று வேலை சாப்பிட வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்களின் தீவிரம் குறைந்து அது படிப்படியாக குணமாகும்.

ஓமம்:
பல விதமான ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்ய ஓமம் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. வயிற்று கோளாறுகளை ஓமம் சரி செய்யும். ஓமத்தில் காணப்படும் தைமோல் செரிமான திரவத்தை சுரந்து செரிமானத்தை சீராக்குகிறது. இது வயிறு வலி, வயிறு உப்புசம் போன்ற செரிமான கோளாறுகளை சரி செய்ய வல்லது.

சுக்கு:
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை போக்க சுக்கு உதவும். மேலும் இது வாயுத்தொல்லையையும் சரி செய்யும். குடல் மற்றும் உணவுப் பாதையை சுத்தம் செய்வதன் மூலம் சுக்கு வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுகிறது. ஆகவே வயிற்று புண்கள் குணமாக கரும்புச்சாற்றுடன் சுக்கு கலந்து குடித்து வாருங்கள்.

அதிமதுரம்:
ஆயுர்வேத மருந்தான அதிமதுரம் சுக்கு போல கார்ப்புத்தன்மை இல்லாமல் இனிமையாக இருக்கும். இது வயிற்று புண், இரைப்பை புண் மற்றும் சிறுகுடல் புண்களையும் ஆற்றும். அல்சர் நோய் குணமாக அதிமதுரம் பொடியை கஞ்சியில் கலந்து பருகி வாருங்கள்.

வயிற்று புண் குணமாக இந்த குறிப்புகளை பின்பற்றுவதோடு உங்கள் உணவு முறைகளையும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள். காரமான உணவு, அதிக புளிப்பு மற்றும் இனிப்பு கலந்து உணவுகள், துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். கீரை போன்ற மென்மையான உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ளுங்கள்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 712

    0

    0