ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாவி எடுத்து சென்ற ஒன்றியத் தலைவர் : புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 11:15 am

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவராக உள்ள மாலா ராஜேந்திரதுரைக்கும் ஒன்றிய ஆணையர் கருணாகரன் திலகவதி ஆகியோருக்கும் இடையே ஒப்பந்தப்புள்ளி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை ஒன்றிய ஆணையர் அலுவலகத்தையும் ஒன்றிய பொறியாளர் அலுவலகத்தையும் நேற்று பூட்டு போட்டு பூட்டி சாவியை எடுத்துச்சென்ற சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டு போட்டு பூட்டிய ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை மீது ஒன்றிய ஆணையர்கள் கருணாகரன் மற்றும் திலகவதி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இரண்டாவது நாளாக இன்றும் ஒன்றிய ஆணையர் அலுவலகம் மற்றும் ஒன்றிய பொறியாளர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க இருப்பதாக ஒன்றிய ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி