‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை பிரச்சினை: பழைய காதலனுக்கு டாட்டா காட்டி புதிய காதலனுடன் டேட்டிங்கில் பிரபல நடிகை..!

Author: Vignesh
15 February 2023, 2:30 pm

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.

இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங்கில் இருந்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளில் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் மகன் உள்ளார்.

தற்போது எமி ஜாக்சன் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார்.

மேலும் Photoshoot செய்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கத்தை விடவில்லை. தற்போது, சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எமி ஜாக்சன், காதலர் தினம் முன்னிட்டு அவரின் புதிய காதலர் எட் வெஸ்ட்விக் உடன் சேர்ந்து லிப் லாக் அடிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதையடுத்து வைரலாகி வருகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!