எத்தனை முறை தான் கேட்பது… செவி சாய்க்காத மத்திய அமைச்சர் : அப்செட்டான கனிமொழி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 3:39 pm

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் அதன் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரன்வே வேலைகள் ஏப்ரல் மாத இறுதியில் நிறைவு பெறும் என்றார்.

இதைத்தொடர்ந்து விரைவில் தூத்துக்குடியில் இருந்து மாலை, இரவு நேரங்களில் அதிகபடியான விமான சேவைகள் இயக்கப்படும் எனக் கூறிய அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

தூத்துக்குடியில் நடைபெறும் பர்னிச்சர் பூங்காவில் தற்போது 2 நிறுவனங்கள் அமைப்பதற்கு உறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகளை தொடங்க உள்ளாத அவர் குறிப்பிட்டார்.

மேலும் சில தொழில் நிறுவனங்களும் வருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் தங்களது பணிகளை தொடங்குவார்கள் என்றார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது ஒரு இரயில் சேவை மட்டுமே உள்ளது கூடுதல் இரயில் இயக்குவது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் மதுரையில் நடைபெற இருக்கும் தென்மண்டல ரயில்வே கூட்டத்தில் இதுகுறித்து பேச இருப்பதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…