கட்டு கட்டாக பணம்.. என்ஐஏ சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் : கோவையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 4:24 pm

கோவை கார் வெடி வெடிப்பு வழக்கு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தினர்.

கோவை கார் வெடிப்பு விபத்து வழக்கு தொடர்பாக 32 இடங்களிலும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 8 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக உக்கடம், கோட்டைமேடு வின்செண்ட் சாலை ஹவுசிங் யூனிட், குனியமுத்தூர் பிருந்தாவன் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இதேபோல மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் ஒரு இடத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 2 வழக்குகளிலும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் 4 இலட்ச ரூபாய் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து 2 வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 487

    0

    0