மார்ச் 31ல் தொடங்கும் ஐபிஎல் திருவிழா.. போட்டி அட்டவணை வெளியீடு : 1427 நாட்களுக்கு பிறகு களமிறங்கும் தோனி..!!
Author: Babu Lakshmanan17 February 2023, 6:32 pm
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் இறுதிப்போட்டி மே 21ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் 70 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், 18 போட்டிகள் டபுள் ஹெட்டர்களாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டியை கருத்தில் கொண்டு, மே மாதம் மூன்றாவது வாரத்திலேயே ஐபிஎல் போட்டிகள் நிறைவடைகின்றன. இதன் பின்னர், இரண்டு வார இடைவெளிக்கும் பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இந்த முறை ஐபிஎல் போட்டிகள் பழைய முறைப்படி சொந்த மைதானத்தில் 7 போட்டிகளும், பிற மைதானங்களில் 7 போட்டிகளும் விளையாடுகின்றன. மொத்தம் 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. 1427 நாட்களுக்கு பிறகு சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி களமிறங்குவதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.