நான் நடிச்சாலே அது BLUE FILM ஆகிவிடுமா… இயக்குனரை விளாசிய 90ஸ் கனவுக்கன்னி!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2023, 3:31 pm

சினிமாவில் பாப்புலர் ஆவது என்பது அவ்வளவு எளிதல்ல.. குறிப்பாக நடிப்பு, திறமை, நடனம் என அத்தனையும் ஊறிப்போனால்தான் புகழுக்கு சென்றடைய முடியும் என்பது விதி விலக்கு.

ஆனால் தற்போதைய காலத்தில் சமூகவலைதளங்கள், டிவி ஷோக்கள் மூலம் பிரபலமானவர்கள் சுலபமாக சினிமாவில் நுழைந்து விடுகின்றனர்.

அப்படித்தான் சினிமாவில் கொடிக்கட்டி பறக்க நினைத்து உள்ளே நுழைந்தவர் ஷகிலா. தமிழில் ஒரு சில படங்களில் என்ட்ரி கொடுத்த அவர், மலையாளத்தில் ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

அதன் பின்னர் ஆபாச படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி, அங்குள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கே டஃப் கொடுத்தார்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷகிலா வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி உள்ளார்.

அதில், 90களில் மிகவும் பிஸியாக இருந்தேன் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனதால், கேம் விளையாடினேன், நாய் குட்டியை கவனித்துக்கொண்டு இருந்தேன்.

ஷகிலாவை படத்தில் நடிக்க வைத்தால், படத்தின் நிறம் மாறிவிடும், அதாவது Blue film ஆகிவிடும் என்று பல இயக்குநர்கள் என்னை புறக்கணித்தனர்.

ஷகிலா நடிச்சாலே அது அந்தமாதிரி படமாகிவிடுமா? எப்படி ஆகும் என்றார்.அப்போது தான், தெலுங்கு ஜெயம் படத்திற்காக இயக்குநர் தேஜா ரவியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அவரை கடவுளின் அவதாரம் என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது.

மேலும், என்னிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் எனக்கு யார் கிட்டையும் நோ சொல்ல வராது, யார் என்ன உதவி கேட்டாலும், கடன் வாங்கியாவது உதவி செய்வேன்.இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் என வருத்தப்பட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 921

    0

    0