ஒலிநாடாக்கள் மூலம் புகழ்பெற்ற நடிகர் மயில்சாமி : மறைவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 12:01 pm

நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது.

மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி. தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் நடிகர் மயில்சாமி.

திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மயில்சாமி மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலக கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்