அந்த 3 நாள் எனக்கு இப்படி தான் இருக்கும்… அந்தரங்க விஷயத்தை ஓப்பனாக பேசிய குக் வித் கோமாளி பிரபலம்..!
Author: Vignesh20 February 2023, 11:30 am
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோ எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

அந்த வகையில் கடந்தாண்டு முடிந்த, குக் வித் கோமாளி சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டம் ஜெயித்தவர் ஸ்ருதிகா.
தற்போது பேட்டி ஒன்றில் பேசிய போது, இவரது மாதவிடாய் காலம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது அந்த மூன்று நாட்கள் வரும்போதும் இப்போது இருப்பது போலவே இருப்பேன் என்றும், வயிறு வலி என்றோ உடல் உபாதை என்றோ உக்காந்திருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஒன்று படத்துக்கு கிளம்பி விடுவேன், இல்லை என்றால் ஜிம்முக்கு ஒர்க் அவுட்டுக்கு சென்று விடுவேன் எனவும், சிறு வயதில் இருந்தே தான் அப்படி இருந்து விட்டதால் அதைப் பற்றி பெரிதாக, எதையும் செய்ய மாட்டேன் எனவும், இதெல்லாம் தனக்கு ரொம்ப பழகிடுச்சு என தனது அந்தரங்கம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.