திடீரென பெய்த பண மழை… எல்லாமே 500 ரூபாய் நோட்டுகள் : முண்டியடித்து எடுத்த மக்கள்.. (வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 10:48 am

வானத்தில் இருந்து திடீர் பண மழை பெய்தால் எப்படி இருக்கும், அது போலத்தான் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம் கேக்ரி தாலுகாவில் உள்ள அகோல் கிராமத்தில் ஒரு திருமண விழாவில் இந்த பணமழை பொழிந்திருக்கிறது. இதனை எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் கரீம் யாதவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது மருமகனை ஊருக்குள் வரவேற்கும் விதமாக அவர் இவ்வாறு பணத்தை காற்றில் வீசி எறிந்துள்ளார்.

இந்நிலையில் இந்த பணமழையில் தங்களுக்கு ஒரு 500 ரூபாய் நோட்டாவது கிடைக்காதா என பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் கிராமத்தில் நுழைந்தவுடன் ஒரு உயரமான வீட்டின் மாடியின் மீது ஏறிய கரீம் யாதவ் தனது மருமகன் பெயரை குறிப்பிட்டு வாழ்த்தி பணத்தை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார். மக்கள் இந்த பணத்தை பிடிக்க முயன்றதில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது இதில் முதியோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பணத்தை காற்றில் பறக்கவிடும் சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதுபோல ஏற்கெனவே பலமுறை நடந்திருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்னர் இதேபோல இளைஞர் ஒருவர், மேம்பாலத்தில் நின்றுகொண்டு பணத்தை வீசியெறிந்துள்ளார்.

பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட்டை ஒட்டியுள்ள மேம்பாலத்திற்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தியுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கைப்பையிலிருந்து 10 ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீசியெறிந்துள்ளார். ஆள் கோட் சூட் போட்டவாறு, கழுத்தில் பெரிய சைஸ் கடிகாரம் அணிந்திருந்ததால் மக்கள் அவரிடம் போக பயந்துள்ளனர்.

இந்த நபர் ஒரு கட்டத்தில் பாலத்திற்கு கீழேயும் ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்துள்ளார். வானத்திலிருந்து பணமழை பொழிவதை பார்த்த மக்கள் ஓடிச்சென்று அதனை சேகரிக்க தொடங்கினர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • surya 45 movie villan role act in rj balaji ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
  • Views: - 537

    0

    1