வலையபட்டி குரும்பாரின மக்களின் விநோதம் ; தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல்… 300 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம்!!

Author: Babu Lakshmanan
20 February 2023, 1:23 pm
Quick Share

திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே 300 ஆண்டுகளாக தலையில் தேங்காய் உடைத்து வலையபட்டி குரும்பாரின மக்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை – வலையப்பட்டியில் குரும்பாரின மக்கள் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திலிருந்து, சுமார் 300 ஆண்டுகளாக கோவில் திருவிழாவில் தொடர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

இடையகோட்டை அருகே உள்ள வலையபட்டியில் குரும்பாரின மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு பிரார்த்தினைகள் நடந்தவுடன் வருடா வருடம் மஹா சிவராத்திரிக்கு மறுநாளில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்செலுத்துவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு நடைபெற்ற நான்கு நாள் திருவிழாவில் 50க்கு மேற்பட்டோருக்கு கோவில் பூசாரி பூச்சப்பன் பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கரூர், பொள்ளாச்சி, மதுரை, கோவை, உடுமலை மற்றும் பல்வேறு மாநிலமான கர்நாடகா , ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 442

    0

    0