சிம்புவை விட்டு பிரிந்தது ஏன்..? திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக வெளிப்படையாக சொன்ன ஹன்சிகா…!!

Author: Babu Lakshmanan
20 February 2023, 8:41 pm

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர், விஜய், தனுஷ், சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெய்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்கள் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று குடியேறி உள்ளார் ஹன்சிகா. அங்கு நடிகை என்பதை மறந்து குடும்ப வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், நடிகை ஹன்ஷிகா மோத்வானி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் “லவ் ஷாதி டிராமா” என்ற தொடரில் தன்னுடைய சினிமா வழக்கை, காதல், திருமணம் போன்றவற்றை பற்றி பேசியிருந்தார். கடந்த வாரம் கூட தன்னுடைய தோழி கணவரை திருமணம் செய்து கொண்டதாக ஷோசியல் மீடியாவில் எழுந்த புகாரை பற்றி பேசியிருந்தார்.

முன்னதாக ஹன்ஷிகா பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் அவருடைய முன்னாள் காதலர் நடிகர் சிம்புவை பிரிந்த பிறகு இரண்டாவது காதல் செய்ய கடினமாக இருந்ததா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹன்ஷிகா “ஆமாம் அதற்கு எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நான் இன்னொருவரை காதலிக்க எனக்கு குறைந்த்து 7 முதல் 8 ஆண்டுகள் வரையில் ஆனது.

நான் காதலை எப்போதுமே நம்புவேன், நான் காதலிக்கும் நபரிடம் அன்பாக இருந்தாலும் அதை நான் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். அதே போல நான் திருமணத்தையும் நம்புகிறேன். உன்மையில் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்க அதிக நேரம் தேவைப்பட்டது. ஏனென்றால் என்னுடையவராக கடைசி வரையில் என்னுடன் இருப்பவருக்குத் தான் நான் சரி என்று பதிலளிக்க விரும்பினேன். அந்த வகையில் என்னுடைய கணவர் சோஹைல் என்னுடைய காதலின் நம்பிக்கையை அதிகரித்தார், என்று ஹன்ஷிகா கூறினார்.

நடிகர் சிம்புவும், நடிகை ஹன்ஷிகாவும் தொடக்க காலத்தில் உருகி உருகி காதலித்தார்கள் என்று கிசுகிசு கிளம்பியது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில காரணங்களினால் அவர்கள் இருவரும் பிரிந்ததும் ஊர் அறிந்த விஷயம்.

  • surya 45 movie villan role act in rj balaji ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
  • Views: - 1091

    25

    25