48 சென்ட் நிலத்தை அபகரித்த பைனான்சியர்… விரக்தியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி…

Author: Babu Lakshmanan
20 February 2023, 9:10 pm

ராணிப்பேட்டை ; 48 சென்ட் நிலத்தை அபகரித்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்த வாலாஜா அடுத்த தலங்கை நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (மாற்றுத்திறனாளி) என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சித்துள்ளார். இதனை கண்டவர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

75,000 ரூபாய் கடனுக்கு கோர்ட் மூலம் பணம் செலுத்திய பின்பும், 48 சென்ட் நிலத்தை அபகரித்து வைத்துள்ள ராணிப்பேட்டை அம்மூரில் பைனான்ஸ் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், பலமுறை ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்