பழனி முருகனை தரிசிக்க வந்த கேரள பக்தர்கள்… அலகு குத்தியும் , பறவை காவடி எடுத்தும் பரவசம்..!!!
Author: Babu Lakshmanan21 February 2023, 12:08 pm
பழனியில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் அலகு குத்தியும் , பறவை காவடி எடுத்தும் வழிபாடு செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, 48 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையிலும், தைப்பூசத் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து கேரளா மாநிலம் மறையூர் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் 40 வது ஆண்டாவதாக பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தனர்.
பின்னர் கிரிவல பாதையில் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் உடல் முழுவதும் எலுமிச்சம் பழம் வைத்து அழகு குத்தியும், பெண்கள் தீர்த்த காவடிகள் கிரிவல பாதையில் நடனமாடியும், மலை மீது ஏறி பழனி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
தங்களது பல்வேறு வேண்டுதல்களை பழனி ஆண்டவர் நிறைவேற்றியுள்ளதாகவும் இதற்காக நேர்த்தி கடன் செலுத்துவதாக தெரிவித்தனர்.