ஆளுநராகிறார் ஓபிஎஸ்..? ஈரோடு இடைத்தேர்தலில் பரபரப்பை கிளப்பிய முக்கிய பிரமுகரின் பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 9:37 pm

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது வேர் பேசுகையில், ஆளுநர் பயிற்சி மையம் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. தமிழிசை அக்கா தூத்துக்குடியில் டெபாசிட் வாங்கினாரா, இல்லையா என்று கூட தெரியவில்லை. உடனே ஆளுநராகி விட்டார்கள்.

அதற்கு பிறகு இல.கணேசனை ஆளுநராக்கினர், தற்போது அந்த பட்டியலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களும் ஆளுநர் ஆகிவிட்டார்.

எனக்கு தெரிந்து, விரைவில் ஓபிஎஸ் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் அதிமுகவை விரைவில் பாஜக கைப்பற்றிவிடும் எனப் பேசினார்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்