‘சார், எங்களுக்கு கிரவுண்ட் வேணும்’… காரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நிறுத்தி மனு கொடுத்த பள்ளி மாணவிகள்!!
Author: Babu Lakshmanan22 February 2023, 6:39 pm
திருவாரூர் ; மன்னார்குடி அருகே ஆததிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல்வரின் காரைநிறுத்தி தங்கள் பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை கேட்டு மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா சவளக்காரன் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட கிராமப்புற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் இப்பள்ளி கல்வி மற்றும் விளையாட்டில் மாவட்ட, மாநில அளவில் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் பெண்கள் கால்பந்தாட்ட அணி மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்து சிறந்த அரசு பள்ளியாக விருதுகளை பெற்றுள்ளது. இப்பள்ளியில் நீண்ட காலமாக வகுப்பறை கட்டிடம், மாணவர், மாணவியர்களுக்கான கழிவறை, விளையாட்டு மைதானம், சுகாதாரம் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் இன்று திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றபோது அச்சாலை மார்க்கத்தில் உள்ள சவளக்காரன் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் முதல்வரின் காரை நிறுத்தி தங்கள் பள்ளிக்கு தேவையான வசதிகளை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மாணவிகள் முதல்வரிடம் கைகொடுக்க வேண்டும் என்ற ஆசையில் முதல்வர் ஸ்டாலினிடம் கைகொடுக்க முயற்சி செய்தனர். ஆனால் முதல்வரின் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் மாணவிகள் மிகுந்த மனவேனை அடைந்தனர்.