பாக்கியலட்சுமி சீரியலில் வரும் நியூ என்ட்ரி சல்மான் அந்த நாடகத்தில் நடத்தவரா..! முழு ஹிஸ்டரி இதோ..!!
Author: Vignesh23 February 2023, 8:00 pm
புதுமுக நடிகராக பாக்கியலட்சுமி சீரியலில் களமிறங்கியுள்ள சல்மான் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கதை தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சல்மான் என்ற புதுமுக நடிகர் நியூ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இவர் இனி வரும் எபிசோடுகளில் இனியாவுக்கு ஜோடியாக வருவார் என எதிர்பாக்கப்படுகிறது.
அப்படி தான் பாக்கியலட்சுமி சீரியல் ட்ராக் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று தற்போது வைரலாகி வெளியாகியுள்ளது. அதாவது இவர் மாடலிங்காக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையில் கால் பதித்து உள்ளதாகவும், மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இது தவிர ஷார்ட் பிலிம் போன்றவற்றிலும் நியூ என்ட்ரி சல்மான் நடித்து வருகிறார். இவரது நடிப்பு திறமைக்கு தான் விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதை வைத்து பார்க்கும்போது அடுத்தடுத்து விஜய் டிவியில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் எனவும் விரைவில் புதிய ஹீரோவாக கலக்க கூட வாய்ப்பு உண்டு என சீரியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.