உயிருக்கு போராடும் நிர்வான்.. ரூ.11 கோடி கொடுத்து உதவிய முகம் தெரியாத நபர்.. அந்த மனசு தான் சார் கடவுள்..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 7:36 pm

கேரளாவில் உயிருக்கு போராடும் குழந்தையின் மருத்துவ செலவிற்கு முகம் தெரியாத நபர் ரூ.11 கோடி கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காட்டைச் சேர்ந்த சாரங் மேனன் – அதிதி நாயர் தம்பதியின் மகன் நிர்வான். மும்பையில் வசிக்கும் சாரங் ஒரு கப்பலில் பொறியாளராகவும், அதிதி ஒரு மென்பொருள் என்ஜினியராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் நிர்வான், அரிய வகை நோயான முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க சுமார் 17.5 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வளவு பணம் செலவு செய்யும் அளவிற்கு சாரங் மேனன் மற்றும் அதிதி நாயர் தம்பதிக்கு வசதி இல்லை என்பதால், அவர்கள் க்ரவுட் ஃபண்டிங்கை நாடினர். மக்கள் பலர் ஆர்வமுடன் உதவி செய்தனர்.

ஆன்லைன் கிரவுட் ஃபண்டிங் தளங்களான மிலாப் மற்றும் இம்பாக்ட் மூலமாகவும், பிற பங்களிப்புகள் மூலமாகவும் ஜனவரி 28 ஆம் தேதி வரை இந்த ஜோடி ரூ 3.10 கோடி வசூலினாது. இந்நிலையில் நடிகை அஹானா கிருஷ்ணா, சிறுவனின் நோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் அவரது சிகிச்சைக்கு நிதியின் தேவை குறித்தும் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் நிர்வானின் சிகிச்சைக்கு க்ரவுட் ஃபண்டிங் முறையில் நிதி தாராளமாக சேரத் தொடங்கியது. க்ரவுட் ஃபண்டிங்கில் பெயர் தெரியாத நபர், குழந்தை நிர்வானின் சிகிச்சைக்கு 11 கோடி ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறார். அவர் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும், பேர் தெரியாத அந்த நபரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அந்த நபருக்கு நன்றி சொல்லி நிர்வானின் தந்தையும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?