ஒரே நேரத்தில் டபுள் ட்ரீட் : அதிமுக தலைமையகத்தில் இபிஎஸ் உற்சாகம்… ஜெயலலிதா சிலைக்கு மரியாதை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 11:05 am

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது.

அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி உத்தரவிட்டது.

இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அதிமுக தலைமையகத்துக்கு வருகை தந்த இபிஎஸ்க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 75 கிலோ கேக்கை வெட்டி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இபிஎஸ் வழங்கினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…