இந்த அளவிற்கு லோகேஷ் கனகராஜின் வெற்றி அடைய காரணம் இதுதான்: தயாரிப்பாளர் ஓபன் டாக்..!
Author: Rajesh24 February 2023, 12:59 pm
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். இப்படத்தினை தொடர்ந்து, கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் லியோ.
இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விக்ரம் திரைக்கதை இவரை பான் இந்தியா லெவல் பிரபலம் அடைய செய்தது. கமலின் பழைய விக்ரம் திரைப்பட கதாபாத்திரம், கைதி படத்தின் கதாபாத்திரங்கள், சூர்யாவை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது என லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) என்ற மேஜிக்கை உருவாக்கினார்.
ஹாலிவுட்டில் இப்படி சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருந்தாலும் தமிழில் அதை அறிமுகப்படுத்திய பெருமை லோகேஷுக்கே சேரும். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, “மற்ற இயக்குநர்களைவிட லோகேஷ் கனகராஜிடம் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தேவையில்லாமல் அவர் தயாரிப்பாளரின் பணத்தை செலவழிக்கமாட்டார்.
உதாரணத்திற்கு விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக டாப் நடிகை ஒருவரை லோகேஷால் நடிக்க வைத்திருக்க முடியும் ஆனால் நன்கு நடிக்கும் நாயகியே போதும் என காய்த்ரியை நடிக்க வைத்தார். அதேபோல் மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக வளர்ந்துவரும் நாயகியான மாளவிகா மோகனனைத்தான் நடிக்க வைத்தார். எது தேவையோ அதில் தெளிவாக இருக்கிறார் லோகேஷ். தயாரிப்பாளர் பணத்தை வீண் செலவு செய்யாமல் இருப்பதால்தான் லோகேஷ் கனகராஜ் இன்று மிகப்பெரிய வெற்றி இயக்குநராக வலம் வருகிறார்” என கூறியுள்ளார்.