“சிம்பு இனி சிங்கிள் கிடையாது”.. விரைவில் இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளுடன் திருமணம்..!

Author: Vignesh
24 February 2023, 1:45 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.

simbu - updatenews360

இப்போது தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாட்டில் பெண்ணே கிடைக்கவில்லையாம், இதனால் இலங்கையை உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு முறையாக சிம்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 626

    7

    2