ஆவின் பால் தட்டுப்பாடு… மதுரையில் பல் இடங்களில் பால் விநியோகம் தாமதம் ; பால் வண்டிகளை திருப்பி அனுப்பிவைத்த டெப்போ முகவர்கள்!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 8:39 am

மதுரை ; ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் பால் விநியோகம் தாமதமாகியுள்ளது.

மதுரை மாநகர் TVS நகர், அழகப்பன் நகர், பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர் , முத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆவின் டெப்போக்களுக்கு காலை 3 மணிக்கு வர வேண்டிய பால்பாக்கெட்டுகள் வராத நிலையில், பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களிலும் பால் விநியோகம் செய்யாத நிலையில் பொதுமக்கள் பால் டெப்போக்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

4 மணி நேரம் தாமதமான நிலையில், பால் விநியோகம் செய்யாததால், விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டு பால் கெட்டுபோய் விடும் என்பதால், தாமதமாக வந்த பால் வண்டியை டெப்போ முகவர்கள் திருப்பி அனுப்பினர்.

இதனால், தினசரி பால் அட்டைதாரர்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமமடைந்து வருகின்றனர். ஆவின் நிர்வாகம் சீர்கேட்டால் ஆவின் டெப்போ முகவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • good bad ugly movie collected 200 crores in 9 days ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…