18 வயதில் திருமணம்.. 2 முறை அபார்ஷன்.. ஸ்வேதா ஸ்கூல் பங்ஷன்’ல கலந்துக்க முடில: பாடகி சுஜாதா சொன்ன ஷாக்கிங் விஷயம்

Author: Rajesh
26 February 2023, 11:31 am

தென்னிந்திய சினிமா உலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஹிட் பாடல்களை பாடி பிரபலமாக வலம் வருபவர் சுஜாதா மோகன். இவர் இந்தி மொழியிலும் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். இதுவரை 4000 பாடல்களுக்கு மேல் பாடி பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். சுஜாதா மோகன் அவர்கள் தனது 18 வது வயதில் 1981ம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் 1985ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி மகள் ஸ்வேதா மோகன் பிறந்தார். ஸ்வேதா மோகனும் சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது இந்திய சினிமா உலகில் மிகப் பிரபல பின்னணிப் பாடகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்வேதா மோகன். இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் பாடி வருகிறார்.

அதோடு விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக ஸ்வேதா மோகன் இருந்து வருகிறார். 2011ம் ஆண்டு அஸ்வின் சாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்வேதா மோகன். இவர்களுக்கு ஷ்ரேஷ்டா(SHRESTA) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சுஜாதா, ஸ்வேதா, ஸ்வேதாவின் மகள் ஷ்ரேஷ்டா ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், தனது மகள் ஸ்வேதா பற்றி பேட்டி ஒன்றில் பாடகி சுஜாதா பேசியுள்ளார்.

அவர் பேசுகையில்“எனக்கு 2 முறை அபார்ஷன் ஆகிவிட்டது. அதற்கு பின் தான் எனது மகள் ஸ்வேதா மோகன் பிறந்தார். அவர் ஸ்கூல் & காலேஜ் படிக்கும் போது நிறைய நிகழ்ச்சிகளில் பொரும்பாலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அப்போது நான் திரைப்படங்களில் பாடுவதில் தீவிரமாக இருந்தேன். அந்த விஷயங்களை இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது.

அந்த நேரங்களில் நாங்கள் இல்லாததை கண்டிப்பாக ஸ்வேதா நினைத்து வருந்தியிருப்பார். ஆனால் அதற்கு இப்போது ஒன்றும் செய்யமுடியாது அதற்கெல்லாம் ஈடு செய்யும் வகையில் ஸ்வேதாவின் மகளை பார்த்து கொள்வது எங்களுடைய முழு வேலையாக மகிழ்ச்சியாக செய்து வருகிறோம். ஸ்வேதா வெளிநாட்டில் இருக்கும் போது, பேத்தியை பள்ளிக்கும் கூட்டி செல்வது மீண்டும் அழைத்து வருவது போன்ற அனைத்து வேலைகளையும் தாங்கள் பார்த்து வருவதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார் பாடகி சுஜாதா.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 786

    4

    0