இனி கடைகளில் பேல் பூரி சாப்பிட வேண்டியதில்லை, வீட்டிலேயே 5 நிமிடத்தில் பேல் பூரி ரெடி!!!
Author: Hemalatha Ramkumar26 February 2023, 6:25 pm
பேல் பூரி நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் என்றாலும், இதனை நாம் வீட்டில் செய்வது இல்லை. இதனை நாம் பெரும்பாலும் ரோட்டுக் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால், இதனை நாம் வீட்டிலும் செய்யலாம். அதுவும் மேகியை வைத்து 5 நிமிடங்களில் சுவையான பேல் பூரியை நம் வீட்டிலேயே தயார் செய்து விடலாம். வாருங்கள், மேகியை வைத்து எப்படி பேல் பூரி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பட்டர் – 1 ஸ்பூன்
மேகி – ஒரு பாக்கெட்
வெங்காயம் – 1
தக்காளி சாஸ் – 1
பாதாம் – 1 ஸ்பூன்
முந்திரி – 1 ஸ்பூன்
நிலக் கடலை – 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
மிளகாய் சாஸ் – 2 ஸ்பூன்
கொத்த மல்லி – தேவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு வாணலில் நிலக் கடலையை பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். நிலக் கடலையில் உள்ள தோலை எல்லாம் நீக்கி வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு, வாணலில் பட்டர் சேர்த்து ஒரு மேகி பாக்கெட்டை பிரித்து கொட்டவும்.
- பொன்னிறம் ஆன உடன், அடுப்பை ஆஃப் செய்து விட்டு, அதில் வறுத்து வைத்த நிலக் கடலை, பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பை கூட நீங்க பொன்னிறம் ஆக வறுத்தும் சேர்க்கலாம்.
- அடுத்து மேகி மசாலா சேர்த்து நன்றாக கலந்து விடவும். வேண்டும் என்றால் கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
- அதன் பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் அதே போல் வெட்டி வைத்த தக்காளியை அதில் சேர்க்கவும்.
- இவற்றை எல்லாம் நன்றாக கலந்து விட்ட பின்னர், 2 ஸ்பூன் தக்காளி சாஸ் மாறும் 2 ஸ்பூன் மிளகாய் சாஸ் ஊற்றவும்.
- கொத்த மல்லி இலைகளைத் தூவி விட்டால் போதும், சுவையான பேல் பூரி ரெடி.
குறிப்பு: உங்களிடம் தக்காளி சாஸ் மற்றும் மிளகாய் சாஸ் இல்லை என்றால், நீங்கள் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் பிழிந்து விடலாம்.