கண்ணை மறைத்த காமம்… வீட்டை விட்டு ஓடிய மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு.. தெருவில் பிஞ்சுகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 8:19 pm

கட்டிய மனைவி இரண்டு. குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளகாதலனுடன் ஓடியதால் மனமுடைந்த கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை – உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை, நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஏழு வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார்.

ராஜா உள்ளூரில் வேலை பார்த்து குடும்ப வருமானம் போதாததால் அவ்வப்போது வெளியூர்களுக்கும் வேலைக்கு சென்று தங்கியிருப்பது வழக்கம்.
மேலும் ராஜாவின் மனைவி நித்யா திருச்சியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு வேலை செய்யும் திருச்சி வடக்கு அரியாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.

இருவரும் நெருக்கமாக இருந்தது வந்துள்ளனர். இந்த விஷயம் ராஜாவுக்கும் தெரிய வந்தததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், நித்யா கள்ளகாதலனுடன் பேசுவதை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ராஜா லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வந்துள்ளனார்.

இந்நிலையில் கடந்த வாரம் நித்தியா தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜா, வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ராஜா மேலவாளாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் அவரது உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. இது தொடர்பாக தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 728

    0

    0