சர்க்கரை வள்ளிக் கிழங்கு நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு உணவாகும். இதில் நம் உடலுக்குத் தேவையான ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இதனை நாம் பெரும்பாலும் அப்படியே வேக வைத்து சாப்பிடுவது வழக்கமாகும். ஆனால், இதனை வைத்து பாயாசம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி வாருங்கள், இந்த சுவையான பாயாசத்தை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சக்கரைவள்ளி கிழங்கு – 3
ஜவ்வரிசி – 3 ஸ்பூன்
கெட்டி தேங்காய் பால் – 1கப்
ரெண்டாம் பால் – 1கப்
வெல்லம் – 3/4 கப்
நெய் – 2 ஸ்பூன்
தேங்காய் – 1 கப்
முந்திரி – 1 ஸ்பூன்
பாதாம்
காய்ந்த திராட்சை
ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி சற்று நேரம் (குறைந்தது ஒரு மணி நேரம்) ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை வள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி அதன் தோலை சீவி எடுத்து விட வேண்டும்.
- பின்னர், சீனிக் கிழங்கை கிரேட்டர் கொண்டு சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலில் எண்ணெய் சேர்த்து துருவி வைத்த சீனிக் கிழங்கைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
- வதங்கிய உடன் அது வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்.
- வெந்த பின்னர் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளவும்.
- அடுத்து வெல்லம் சேர்த்து கிண்டி விடவும். அதனோடு தேங்காய்ப் பாலை ஊற்றுங்கள்.
- வேறு ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்ச்சை மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பாயாசத்தில் ஊற்றவும்.
- உங்களுக்கு ஏலக்காய் பிடிக்கும் என்றால், ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விடலாம்.
அவ்வளவு தான், சுவையான பாயாசம் ரெடி. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்றவை அடங்கி உள்ளதால் இது சத்தானதும் கூட.
குறிப்பு:
- வெல்லத்தை அப்படியே சேர்க்காமல் நீங்கள் பாகு எடுத்தும் சேர்க்கலாம்.சுவை கூடுதலாக இருக்கும்.
- தேங்காய்ப் பால் எடுப்பதற்கு சிரமமாக இருந்தால், நீங்கள் பசும் பால் அல்லது பாக்கெட் பாலைக் காட்சியும் பயனப்டுத்தலாம்.