ஈரோட்டில் திமுக – அதிமுகவினரிடையே மோதல் ; வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
27 February 2023, 4:45 pm

வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் கூறியதால் இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

ஈரோடு பெரியண்ண வீதி கலைமகள் வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் காலை 11 மணியளவில் வாக்குச்சாவடி மையம் அருகே திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் வழங்குவதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி அதிமுக, திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, திமுகவினர் இந்த பகுதிக்கு அதிமுகவினர் வரக்கூடாது என்றும், இது எங்கள் குடும்பத்தினர் இருக்கிறார்கள் எனக் கூறினர். இதனால், மேலும் மோதல் அதிகரித்தது.

உடனே வாக்குச்சாவடி மையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் வாக்காளர்கள் அந்த பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா..? என சோதனையிலும் ஈடுபட்டனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!