இணையத்தை கலக்கும் சூப்பர் ஹிட் பாட்டு.. ஜோடியாக Dance ஆடிய சித்தார்த், அதிதி..! (வீடியோ)
Author: Vignesh28 February 2023, 7:30 pm
பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஜோடியாக நடித்திருந்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் அதிதி பிறந்த நாள் அன்று சித்தார்த் ,” என் இதயத்தின் இளவரசியே” என்று பதிவிட்டு காதலிப்பதை உறுதி செய்தனர். இதனிடையே, சித்தார்த்தும், அதிதியும் ஜோடியாக செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் அந்தவகையில், தற்போது சித்தார்த் மற்றும் அதிதி சூப்பர் ஹிட்டான டம் டம் பாடலுக்கு நடனம் ஆடி ரீல் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
நடிகர் ஹன்சிகா மோத்வானி, “Cute” என கமெண்ட் செய்துள்ள சூழலில், சுஹாசினி உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.