2008 தாக்குதல் சம்பவம் போல மீண்டும் அசம்பாவிதம் நிகழ்த்த திட்டமா..? மும்பைக்குள் புகுந்த ஆபத்தான நபர் ; என்ஐஏ எச்சரிக்கை.. உஷாராகும் போலீஸ்!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 8:23 pm

வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் ஒருவர் மும்பை மாநகருக்குள் புகுந்துள்ளதாக என்ஐஏ அமைப்பினர் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் பல இடங்களில் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தினர். மொத்தம் நான்கு நாட்கள் நடந்த இந்தத் தாக்குதலில் இறுதியில், ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார். மற்ற அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியாவை பெரிதும் ரனமாக்கியது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் பயங்கரவாத பயிற்சி பெற்ற ஆபத்தான நபர் மும்பைக்கு வந்துள்ளதாக மும்பை போலீசாரை என்ஐஏ எச்சரித்துள்ளது. இது தொடர்பான அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “டேஞ்சர்” என்று குறிப்பிடப்பட்டு, சர்பராஜ் மேமன் என்ற அந்த நபர் ஆபத்தானவராக இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நபர் இந்தூரில் உள்ள தார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த நபர் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கும் அவர் சென்று பயிற்சி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் பாகிஸ்தான் சென்றதற்கான கூடுதல் தகவல்கள் எதுவும் அதில் இல்லை. மேலும், என்ஐஏ அனுப்பிய அந்த எச்சரிக்கை மெயிலில் குறிப்பிட்ட அந்த நபரின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். மேலும், அந்த நபர் குறித்துக் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 500

    0

    0