தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.. இரு குழுக்களாக பிரிந்து கல்வீசித் தாக்குதல் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 9:23 pm

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தனியார் கலை அறிவியல் கல்லூரி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் பைக் நிறுத்துவதில் இரு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்பு இரு மாணவர்களும் அங்கு சமாதானம் ஆனதாகவும் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அய்யலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது.

இந்த அய்யலூர் பேருந்து நிறுத்தம் வரை மாணவர்களுக்கிடையே தகராறு நடைபெற்று கொண்டே வந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த வடமதுரை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி பிரச்சனையில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவர்களுக்கிடையே நடந்த இந்த மோதல் அய்யலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!