மகாபாரதத்தில் சூதாட்டம்… இது தான் காரணமா? மத்திய அரசை சீண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 9:35 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 70வது பிறந்தநாள் விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் எனும் நான் நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன். ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அந்தப் பெயருக்குள் உள்ளனர்.

எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று கூறினார்களோ, அதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கூறியவர் அண்ணா. மக்களின் கவலைகளை தீர்க்கும் தலைவனாக இருப்பேன் என உறுதி பூண்டுள்ளேன். அண்ணாவை போல் பேச தெரியாது, கலைஞரை போல் எழுதத் தெரியாது, ஆனால் அவர்களைப் போல் உழைக்கத் தெரியும்.

மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் தடை செய்ய மறுக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய முதல்வர். எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல, இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா என கூறினார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!