“அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுறேன்”… 18-வருடமாக சினிமாவில் இருந்தும் தனுஷ் பட நடிகரின் பரிதாப நிலை..!

Author: Vignesh
2 March 2023, 4:49 pm

சினிமாவில் பொதுவாக வளர வேண்டுமென்றால் திறமை இருந்தால் போதும் என பலரும் கூறி வந்தார்கள் ஆனால் தற்போது, திறமையுடன் அதிர்ஷ்டமும் தேவை என்று கூறிப்படுகிறது. ஒரு சிலருக்கு நல்ல திறமை இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது ஆனால் அதுவே ஒரு சிலருக்கு திறமை இல்லை என்றாலும் அதிர்ஷ்டம் அடிக்கும் அப்படி தான் பல நட்சத்திரங்கள் இன்றைய உச்சத்தில் இருக்கிறார்கள்.

thulluvatho-ilamai-updatenews360

அதேபோல் தான் 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. இந்த படம் பள்ளி பருவகால காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதனிடையே, துள்ளுவதோ இளமை படம் தனுஷிற்கு இது மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ், ஷெரின், அபிநய் என பல புதுமுக நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் தனுசுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக அபினய் நடித்திருந்தவர்.

thulluvatho-ilamai-updatenews360

இந்த நிலையில் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனான அபிநய் என்பவருக்கும் நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. மேலும் இந்த படத்திற்குப் பிறகு தனுஷூக்கு பட வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ ஆனால் அபிநய்க்கு பல வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தை தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவருக்கு இந்த இரண்டு திரைப்படமும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அபிநய் ஒப்பந்தம் செய்யப்பட்ட 8 திரைப்படங்களும் கைவிடப்பட்டது.

thulluvatho-ilamai-updatenews360

அதன் பிறகு சினிமாவில் கிடைத்த வாய்ப்பை அபிநய் பயன்படுத்தி வந்தார். பிறகு சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, தன்னுடைய அம்மாவும் இறந்து போனதால் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவித்தார்.

பிறகு நடிகர் அபிநய் வறுமையின் காரணமாக அம்மா உணவகத்தில் சாப்பிட்டு காலத்தை ஓட்டி வந்தார் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கண்ணீருடன் தெரிவித்தார். இதனை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கா இப்படி ஒரு நிலைமை என ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…