இதுக்கெல்லாம் லஞ்சமா? ரூ.50 ஆயிரம் பணத்தை பெற்ற அரசு அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..(வீடியோ)!!
Author: Udayachandran RadhaKrishnan2 March 2023, 7:17 pm
50,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் ஆறு லட்சத்து எழுபத்தி ஏழு லட்ச ரூபாய் கழிவறை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்ததில் தனக்கு வர வேண்டிய, ஒப்பந்தக் தொகையை பெற, பொதுப்பணித் துறையின் கட்டிட பிரிவு செயற்பொறியாளர் ரமேஷ் குமாரை காண்ட்ராக்டர் முருகன் அணுகினார்.
அப்போது அவர் ஒப்பந்ததொகையை பெறுவதற்கு ரூ. 75 ஆயிரம் லஞ்சமாக தருமாறு முருகனிடம் செயற்பொறியாளர் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுத்தால் உடனடியாக ஒப்பந்த தொகையை பெறுவதற்கு கையொப்பம் விடுவதாகவும் செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த முருகன் செயற்பொறியாளருக்கு முதற்கட்டமாக ரூ.50,000 கொடுப்பதை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார்.
அதன்பின் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.