3 முறை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநரின் மனைவி திடீர் மரணம் : திரையுலகத்தினர் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 7:46 pm

3 முறை தேசிய விருது வென்ற பிரபல இயக்குநரின் மனைவி திடீர் மரணமடைந்த சம்பவம் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடனக்கலைஞர் ஷீபா. இவர் இயக்குனர் ஷியாம பிரசாத்தின் மனைவியும் ஆவார். இவருக்கு வயது 59 ஆகிறது. இவர் கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 10:30 மணிக்கு காலமானார்.

ஷீபா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். ஷீபா நடனக் கலைஞராகவும், தூர்தர்ஷனில் தொகுப்பாளராகவும், எஸ்பிஐ அதிகாரியாகவும் பணிபுரிந்தவர் ஆவார்.

தூர்தர்ஷனில் அறிவிப்பாளராக மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தான் ஷியாம் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தூர்தர்ஷனில் ‘மெயில் பீலி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இவருக்கு விஷ்ணு, சிவகாமி என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 417

    0

    1