தக்காளி, வெங்காயம் மட்டும் போதும், பத்தே நிமிடத்தில் தயாராகும் தக்காளி தொக்கு!!!

Author: Hemalatha Ramkumar
3 March 2023, 10:23 am

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம் என எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் ஏற்றபடி பத்தே நிமிடத்தில் தயாராகும் தக்காளி தொக்கு எப்படி செய்வது என பார்க்கலாம். இதனை குறைவான பொருட்களுடன், குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம்- 2
தக்காளி- 3
பச்சை மிளகாய்- 4
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
நறுக்கிய பூண்டு- ஒரு தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சோம்பு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி

செய்முறை:
*வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

*தக்காளி நன்கு மசிந்தவுடன் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.

*மிளகாய் தூளின் பச்சை வாசனை போனவுடன் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*தொக்கு பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1099

    0

    0