ரூட்டு தல யாரு..? அரசுப் பள்ளி மாணவர்களிடையே அடிதடி… கெத்துக்காக நடந்த குஸ்தி.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan3 March 2023, 4:51 pm
ராமநாதபுரம் : அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குருப் தல போட்டியில் இரு மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே பள்ளி குரூப் தல போட்டி அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்த போது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் குரூப் தல போட்டி நிலவியது. இதனால், ஆத்திரமடைந்த 11ம் வகுப்பு மாணவனும், 12ம் வகுப்பு மாணவனுக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், இருமாணவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் இரண்டு மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதனை சக மாணவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கமும், கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.