வடமாநில தொழிலாளி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு.. காவல்நிலையம் முன்பு திரளும் வடமாநிலத்தவர்கள் ; திருப்பூரில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 6:26 pm

திருப்பூர்: வடமாநில தொழிலாளி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அடித்து கொலையா..? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், சஞ்சீவ் குமாரின் செல்போன் உள்ளிட்டவை காணவில்லை.

எனவே, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையம் முன்பு குவிந்து வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ