விஜய்யை கேவலப்படுத்திய வாரிசு பட இயக்குநர் தில் ராஜு : வெடித்தது புதிய சர்ச்சை!!!

Author: Vignesh
4 March 2023, 7:15 pm

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவியது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்தது.

varisu thunivu - updatenews360

துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மீது நடிகர் விஜய் சற்று கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. அதற்க்கு காரணமே வாரிசு படம் தெலுங்கில் தள்ளிப்போனது தான் என்று கூறப்பட்டது.

முன்னதாக தில் ராஜு பேசிய போது, விஜய் தான் எப்பவும் சூப்பர் ஸ்டார் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் வாரிசு படமோ தில் ராஜு நினைத்தபடி வசூலை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே, பாலகம் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது தில் ராஜு வாரிசு ப்ரோமோஷன் நிகழ்ச்சி பாணியில் பேசியுள்ளார்.

அதாவது அவர் பேசியதாவது, இந்த சினிமால பைட் இல்ல, டான்ஸ் இல்ல, அதைவிட விஜய் சாரோட பாடி லாங்குவேஜ் இல்ல, ஆன பொழுது போக்கு இருக்கு என்று பேசி விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

வாரிசு படத்தில் விஜய் கொஞ்சம் ஓவரா பாடி லாங்குவேஜ் காமிச்சு இருப்பார். அதை தான் தில் ராஜு கிண்டலடித்து உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனால், வாரிசின் வசூல் தில் ராஜாவுக்கு திருப்தி தராத காரணத்தில் தான் தில் ராஜு இப்படி கிண்டலடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

  • Celebrity criticized Actrss Divya Bharathi on GV Prakash Issue ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!