சினிமாவும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம் : துறவியாக செல்ல முடிவெடுத்த ரஜினிகாந்த்.. பரபரப்பு தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan5 March 2023, 6:41 pm
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். தனது ஸ்டைல், நடிப்பு, திறமையால் உச்ச நடிகராக வலம் வருபவர்.
ஆரம்பத்தில் பஸ் கண்டெக்டராக வேலை பார்த்த அவர் சினிமாவில் கொடிக் கட்டி பறக்க ஆரம்பித்தார். பின்னர் நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் தங்கையான லதாவை திருமணம் செய்து ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்களும் உள்ளனர்.

கொடிகட்டி பறந்த ரஜினி, போயஸ் கார்டனில் வீடு ஒன்றை கட்டினார். பின்னர் லதாவிடம் சென்று தான் சன்னியாசம் போகலாம் என இருக்கிறேன். இல்லற வாழ்க்கை போர் அடித்து விட்டது.
தேவையான அளவு சொத்து இருக்கு, அறிவான குழந்தைகள் இருக்காங்க. இந்த குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்வாய் என தெரியும் என கூறியிருக்கிறார். லதாவும் ஓகே உங்களுக்கு எது சரி என தோன்றுதோ செய்யுங்கள் என கூறிவிட்டார்.
அந்த சமயம் ரஜினி கவிதாலயா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க, கே பாலச்சந்தரிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். அந்த அட்வான்ஸை திருப்பி அவரிடம் கொடுத்துவிட்டு இந்த விஷயத்தை சொல்லலாம் என நினைத்து அவரிடம் சென்றுள்ளார்.
அப்போது அவரிடம், இன்னும் 2 நாளில் சன்னியாசம் போகலாம் என இருக்கிறேன், இந்த வாழ்க்கை பிடிக்கல, அதே சமயம் இந்த அட்வான்ஸ் செக்கை கொடுத்துவிட்டு போகலாம் என வந்தேன் என கூறியுள்ளார்.
ஆனால் பாலச்சந்தரோ, அட்வான்ஸ் திருப்பி தர வேண்டாம். நீயே வைத்துக்கொள் என கூறினார். இல்லை எனக்கு வேண்டாம் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என ரஜினி கூற, வேண்டாம் சன்னியாசம் இருக்கும் போது மீண்டும் இல்லற வாழ்க்கை தேடி நீ வரலாம், 10 நாளில் சன்னியாசம் பிடிக்க வில்லை என நீ திரும்பி வரும் போது இது பயன்படும், அப்போது என் படத்தில் நடி என கூறியுள்ளார்.
உடனே ரஜினியும் புறப்பட்டு வந்துவிட்டார். உடனே பாலச்சந்தர் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு கால் செய்து ரஜினி சன்னியாசம் போவதை பற்றி கூறியுள்ளார்.
உடனே ரஜினியை சந்தித்து எஸ்பி முத்துராமன் இது குறித்து சமாதானம் பேசியுள்ளார். அப்போது ரஜினி, நான் சன்னியாசம் செல்கிறேன், முடியவே முடியாது என கூறியுள்ளார். எஸ்பி முத்துராமனும் நாளைக்கு உன்னை சந்திக்கிறேன் என கூறி திரும்பிவிட்டார்.
ஆனால் இந்த செய்தி எப்படி ஊடகத்துக்கு தெரிந்தது என தெரியவில்லை. உடனே ஊடகத்தில் இருந்து தகவல் பரவியதும், போயஸ் கார்டனில் ரசிகர்கள் குவிந்தனர்.
உடனே அங்கு வந்த எஸ்பி முத்துராமன், ரஜினியை வெளியே வா என அழைத்துள்ளார். உடனே ரஜினி தனது வீட்டை விட்டு வெளியே வந்த போது ரசிகர்களை பார்த்து அதிர்ச்சியானார்.
அதில் ரசிகர் ஒருவர், கையில் தீப்பெட்டி மண்ணென்னை வைத்துக் கொண்டு சன்னியாசம் போறனு சொல்லு தலைவா, நா இப்பவே தீக்குளித்து விடுகிறேன் என கூறியுள்ளார்.
உடனே தனது முடிவில் இருந்து பின் வாங்கிய ரஜினி, நான் வெறும் கையை காலை ஆட்டிவிட்டு, தமிழையே தடுமாறி பேசுகிறேன், எனக்காக இத்தனை பேரா, உயிரை கொடுக்க தயாராக இருக்கிறார்களே என யோசித்து பின்னர் அந்த முடிவை கைவிட்டுவிட்டார். இந்த தகவலை செய்யாறு பாலு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்ததில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து 20,30 ஆண்டுகள் ஆனாலும் தற்போதைய தலைமுறையினருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் எங்கள் தளத்தில் பதிவிட்டுள்ளோம்.