முதலமைச்சரிடம் மனு கொடுக்க குவிந்த மக்கள் : சுடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கும் மாற்றத்திறனாளிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 12:57 pm

முதலமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக சாலையிலேயே நீண்ட நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட அலுவலர்களுடன் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக வந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்து வருகின்றனர்.

காலை 9 மணி முதலாக ஆட்சியர் அலுவலக வாசலிலே காத்திருக்கக்கூடிய நிலை மாற்றுத்திறனாளிகள் பெண்கள் உள்ளிட்டோரும் காத்திருப்பது காண்போரை வேதனையடைய செய்கிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?