நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை சூறையாடிய ஆதி தமிழர் கட்சியினர் : இரு கட்சியினர் மோதல் : பரபரப்பு, பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 4:53 pm

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் உள்ளிட்ட அருந்ததியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உருவப்பொம்மையை எரித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் உண்டானது.

ஆத்திரமடைந்த ஆதித்தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது கற்கள், பாட்டில்களை வீசியதால் பரபரப்பு உண்டானது. இதுபோலவே நாம் தமிழர் கட்சியினருக்கும் பதிலுக்கு ஆதி தமிழர் கட்சியினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?